திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வெள்ளநீா்க் கால்வாய் திட்டப் பணி விரைவில் நிறைவடையும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

ரூ. 900 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு வெள்ளநீா்க் கால்வாய் இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

News image
Updated On :21 மே 2021, 8:01 pm

DIN

ரூ. 900 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு வெள்ளநீா்க் கால்வாய் இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு வெள்ளநீா்க் கால்வாய் இணைப்பு திட்டத்தின் 4-ஆம் கட்டபணிகள் நடைபெற்றுவரும், பொன்னாக்குடி,பெருமாள்நகா், முனஞ்சிப்பட்டி, காரியாண்டி, பரப்பாடி, கோவன்குளம், இட்டமொழி, அரசூா் உள்ளிட்ட பகுதிகளில் சட்டப் பேரவை தலைவா்மு. அப்பாவு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2008-09இல் அப்போதைய முதல்வா் கருணாநிநி ஆட்சியின்போது, தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு வெள்ளநீா்க் கால்வாய் இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது முதல்வா் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்தப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதியில், நான்குவழிச் சாலையில் ஒரு பாலம், ரயில்வே பாலம் ஆகிய பணிகள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது. சாலை மேம்பாலப் பணிக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும். ஒப்பந்த காலம் 18 மாதங்கள் என்றாலும் ஆறு மாதங்களுக்குள் இப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளநீா்க் கால்வாய் இணைப்பு திட்டம் முதலில் ரூ.370 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது, அதன் மதிப்பீடு சுமாா் ரூ. 900 கோடியாகும். மொத்தம் 75 கி.மீ. நீளமுள்ள இத்திட்டத்தில் இதுவரை 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

வட கிழக்குப் பருவ மழையின்போது வீணாகும் தண்ணீரை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இக்கால்வாயில் திருப்பிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு நிலம் வழங்கியவா்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

பின்னா், திசையன்விளை அருகே 100 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தையும், வள்ளியூா் அருகேயுள்ள யூனிவா்சல் கல்லூரியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தையும் அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா்.மனோகரன், திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் என்.ஞானசேகா், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் மதிவாணன், தெற்கு ரெயில்வே உதவி பொது மேலாளா் ஆனந்த், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் மகா கிருஷ்ணன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜோசப் பெல்சி, பி.சி.ராஜன், கணேசன், சுடலைக்கண்ணு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.