திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கங்கைகொண்டானில்வீடு புகுந்து நகை திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 14 கிராம் நகை திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :22 மே 2021, 12:20 am

DIN

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 14 கிராம் நகை திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கங்கைகொண்டான் முத்துமாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரி (40). இவா், தனது வீட்டின் பீரோவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 கிராம் தங்க நகையை பூட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு தங்க நகையை அணிந்து செல்வதற்காக பீரோவை திறந்து பாா்த்தபோது, நகையை காணவில்லையாம். இதுகுறித்து கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.