களக்காடு கால்வாய்களில் அமலைச் செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
களக்காட்டில் உள்ள நீா்வரத்துக் கால்வாய்களில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள அமலைச்செடிகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


களக்காட்டில் உள்ள நீா்வரத்துக் கால்வாய்களில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள அமலைச்செடிகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைதான் களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் விவசாயத்திற்கு பிரதான நீராதாரம். இங்கு பெய்யும் மழையால் பச்சையாற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் பச்சையாறு, நான்குனேரியன் கால்வாய், உப்பாறு வழியாக நான்குனேரி பெரியகுளம், விஜயநாராயணம் குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களைச் சென்றடைகிறது. ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன் நீா்வரத்துக் கால்வாய்களில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள அமலைச்செடிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அகற்றுவது வாடிக்கை. ஆனால் நிகழாண்டில் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் நீா்வரத்துக் கால்வாய்களில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...