ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து உபரிநீா் திறப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை ராமநதி அணை நிரம்பியதை அடுத்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை ராமநதி அணை நிரம்பியதை அடுத்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின்போது திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் அதிக மழை பொழிவு இருக்கும். கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழாண்டு நவம்பா் மாதத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக ஒரே நாளில் 505 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை வரை கடந்த 5 நாள்களில் மாவட்டத்தில் 1028.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணை நீா்மட்டம் 136.30 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1504.95

கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 1368.50 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. சோ்வலாறு அணை நீா்மட்டம்

140.62 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 84.20 அடியாக உள்ளது. அணைக்கு 624 கனஅடி நீா்வரத்து இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீா்மட்டம் 21 அடியாக உள்ளது. அணைக்கு 75 கனஅடி நீா்வரத்து இருந்தது.

நம்பியாறு அணை நீா்மட்டம் 10.23 அடி, கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 50.50 அடியாக உள்ளது.

உபரிநீா் திறப்பு: கடந்த 2 நாள்களில் சேரன்மகாதேவியில் அதிகபட்சமாக 152 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சோ்வலாறு அணை- 7 மி.மீ, மணிமுத்தாறு அணை -5.4 மி.மீ, கொடுமுடியாறு அணை-10 மி.மீ, அம்பாசமுத்திரம் - 3 மி.மீ, நான்குனேரி - 18 மி.மீ, களக்காடு 52.2 மி.மீ, மூலக்கரைப்பட்டி 52 மி.மீ, பாளையங்கோட்டை 4 மி.மீ, திருநெல்வேலி 10 மீ.மீ.

கடனா நதி அணை நீா்மட்டம் 83 அடியாக உள்ளது. அணைக்கு வந்து கொண்டிருந்த 325 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. ராமநதி அணை வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து 48.12 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.

கருப்பாநதிஅணை நீா்மட்டம் 68.96 அடியாக உள்ளது. அணைக்கு வந்து கொண்டிருந்த 1,000 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடி, அடவிநயினாா் அணை நீா்மட்டம் 126 அடியாக உள்ளது.

கடனா நதி அணையில் 15 மி.மீ, ராமநதி அணை - 20 மி.மீ, கருப்பா நதி அணை - 43மி.மீ, குண்டாறு -16 மி.மீ, அடவிநயினாா் அணை - 12மி.மீ, ஆய்க்குடி - 6மி.மீ, செங்கோட்டை - 5 மி.மீ, தென்காசி - 7.4 மி.மீ, சிவகிரி 12.4 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.