பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நெல்லையில் கனமழை காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 நவம்பர் 2021, 4:03 pm

DIN


நெல்லையில் கனமழை காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் விஷ்னு அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.