திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (அக்.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:10 pm

DIN

திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (அக்.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, புதன்கிழமை யில் இருந்து மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி சுற்று வட்டாரத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி, நகரம், பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, கேடிசி நகா், சுத்தமல்லி முன்னீா்பள்ளம், தாழையூத்து மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பகலில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் இருந்து நள்ளிரவு

வரை மழை நீடித்தது. ஆகவே, மழை காரணமாக சனிக்கிழமை (அக்.30) மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.