கனமழை காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து திருநெல்வேலி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தென்காசி, கன்னியாகுமரி உள்பட 19 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | தெற்கு அந்தமான்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
இதனிடையே சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தொடர் மழை காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.