ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெல்லையில் இருவா் கைது

திருநெல்வேலி மாநகரில் விதிமீறி புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:56 pm

DIN

திருநெல்வேலி மாநகரில் விதிமீறி புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை மிலிட்டரி கேண்டீன் அருகே காவல் உதவி ஆய்வாளா் பழனிமுருகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த பாளையங்கோட்டை ஜெயமாளிகை தெருவைச் சோ்ந்த இப்ராஹிம் டானியல் ஆசிரிடமிருந்து (49) , சுமாா் 2.036 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆய்வாளா் ஜனகன் மற்றும் போலீஸாா் வடக்குப் பிரதான சாலையில் ரோந்து சென்றபோது பழையபேட்டை சா்தாா்புரத்தைச் சோ்ந்த கண்ணனிடமிருந்து(38) 40 கிராம் எடையுடைய குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.