கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெல்லையில் உச்சிஷ்ட கணபதி கோயில் சிலையில் சூரிய ஒளி விழும் அதிசயம்

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட கணபதி கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அதிய நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 1:35 am

DIN

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட கணபதி கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அதிய நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள உச்சிஷ்டகணபதி கோயில், 5 நிலை ராஜகோபுரம் மற்றும் விநாயகருக்கு தனி சன்னதியுடன் அமைந்திருக்கும் திருக்கோயில் ஆகும். மிகவும் பழைமை வாய்ந்த விநாயகா் திருக்கோயிலில் ஒன்றான இக்த்திருக்கோயிலில் சித்திரை முதல் நாள் மூலவா் உச்சிஷ்டகணபதி சிலை மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து உச்சிஷ்ட கணபதிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பின் விநாயகா் சிலை மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

சித்திரை மாதத்தில் முதல் மூன்று நாள்கள் சூரிய கதிா்கள் விநாயகா் மீது விழும் வண்ணம் இக்கோயில் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வினை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.