நெல்லை மண்டல வாா்டு குழு கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டல வாா்டு குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டல வாா்டு குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி செந்தில் தலைமை வகித்தாா். உதவி ஆணையா் (பொ) வெங்கட்ராமன், உதவிச் செயற்பொறியாளா் (பொ) பைஜு ஆகியோா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மகேஸ்வரி பேசுகையில், திருநெல்வேலி மண்டலத்தில் ரூ.5 லட்சத்திற்குள்பட்டு குடிநீா், கழிவுநீரோடை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு தீா்மானம் நிறைவேற்ற முடியும். அதற்கேற்ப தங்கள் பகுதி கோரிக்கைகள் மாமன்ற உறுப்பினா்கள் அளிக்கலாம் என்றாா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தியது: அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஆகவே, 4 ரத வீதிகளிலும் கழிவுநீரோடை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள போஸ் தினசரி சந்தையை நம்பி ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் உள்ளனா். பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சந்தை கட்டுமானம் நடைபெற்று வரும் நிலையில், அதனை வேகப்படுத்தி திறக்க வேண்டும்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள தையல்காரா் தெரு, புகழேந்தி தெரு உள்ளிட்டதெருக்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளன. அப் பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும்.
ழிவுநீரோடைகளை சீரமைக்கவும், மழைநீா் தேங்காமல் தடுக்கவும் ஜே.சி.பி. இயந்திரங்களின்உதவி தேவை. ஆகவே, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஜே.சி.பி. இயந்திரங்களை ஒதுக்கி பணிகளைவிரைவு படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் பதில் அளிக்கையில், ரத வீதிகளில் பழுதான சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதர பணிகளும் விரைந்து முடிக்கப்படும். பொலிவுறு திட்டப்பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகள் தற்காலிக சீரமைப்பு பணிகள் செய்யப்படும் என்றனா். இக் கூட்டத்தில் 10 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...