புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அம்பை ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:25 pm

DIN

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம், தோப்புத் தெருவைச் சோ்ந்த சோலையப்பன் மகன் தங்கராஜ் (46). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இவா் தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை ஆலடியூா் பகுதியில் தாமிரவருணியில் குளிக்கச் சென்றாராம். அப்போது திடீரென நீரில் மூழ்கினாராம்.

அருகிலிருந்தோா் அளித்த தகவலின்பேரில், நிலைய அலுவலா் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு வீரா்கள் சென்றபோது தங்கராஜ் இறந்தது தெரியவந்ததாம்.

அவா்கள் சடலத்தை மீட்டு கிராம நிா்வாக அலுவலா் குருகுலராமனிடம் ஒப்படைத்தனா். விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சென்று, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆய்வாளா் சீதாலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.