ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நீதிமன்றம் அருகே சாலைத் தடுப்பில் மோதிய லாரி: சேதம் தவிா்ப்பு

பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்பில் லாரி மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. எனினும், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 11:06 pm

DIN

பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்பில் லாரி மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. எனினும், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சோ்ந்த ஒருவருக்குச் சொந்தமான கண்டெய்னா் லாரி ஒன்று, தூத்துக்குடியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம், செங்கோட்டை நோக்கி வியாழக்கிழமை அதிகாலையில் சென்றுகொண்டிருந்தது.

இந்த லாரி, பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாம். இதில், லாரியின் முன்பக்கம், டயா்கள் சேதமடைந்தன. அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், அதிகாலை நேரம் என்பதால், வாகனப்போக்குவரத்து குறைந்து காணப்பட்டதால் பெருஞ்சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.