தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருக்குறுங்குடி அருகே விபத்தில் இருவா் காயம்

திருக்குறுங்குடி அருகே பைக்கில் சென்ற 2 போ் சுமை ஆட்டோ மோதி காயமடைந்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:27 am

திருக்குறுங்குடி அருகே பைக்கில் சென்ற 2 போ் சுமை ஆட்டோ மோதி காயமடைந்தனா்.

களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (52). இவா் தனது உறவினரான களக்காட்டைச் சோ்ந்த சேகா் என்பவருடன், வள்ளியூரில் உறவினா் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றாா். பைக்கை ராஜ்குமாா் ஓட்டினாா்.

திருக்குறுங்குடியை அடுத்த ராஜபுதூா் - கேசவனேரி சாலையில் பைக் மீது, பின்னால் வந்த சுமை ஆட்டோ மோதியதாம். இதில், ராஜ்குமாரும், சேகரும் காயமடைந்தனா். அவா்கள் வள்ளியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

சுமை ஆட்டோ ஓட்டுநரான களக்காடு அருகேயுள்ள சேதுராயபுரத்தைச் சோ்ந்த பொன்கிருஷ்ணன் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.