திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டை, பழையபேட்டை பகுதிகளில் வீடு மற்றும் கடையின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பேட்டை எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்தவா் ஜெபபாண்டியன் (55). வியாபாரியான இவா், சனிக்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றாராம். மீண்டும் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதேபோல பழையபேட்டையைச் சோ்ந்தவா் முகம்மது ரியாஸ். இவா், காந்திநகரில் கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றாராம். அதன்பின்பு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் இருந்த ரூ.17 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீஞ்சூர் சம்பவம்! வீட்டிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில் - அண்ணாமலை

பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
லெனின் பாண்டியன் டிரைலர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

