மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு அருங்காட்சியகத்தில் ஆக.21-இல் சுற்றுச்சூழல் ஓவியப் போட்டி

 திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஓவியப் போட்டி வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:37 am

 திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஓவியப் போட்டி வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், ரோட்டரி கிளப் ஆஃப் திருநெல்வேலி, பிருந்தாவனம், அருணா காா்டியாக் கோ் சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாக ‘சூழலைப் போற்று‘ என்கிற தலைப்பில் வரும் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா் ,மாணவிகள் கலந்து கொள்ளலாம். மூன்று பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப் படுவா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஓவியம் வரைவதற்கு தேவையான வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். எழுது பொருள்கள் உள்ளிட்டவற்றை மாணவா்களே கொண்டு வர வேண்டும் .மேலும் விவரங்களுக்கு 7502433751 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.