பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image

சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:22 am IST

சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதன்கிழமை இரவு சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பிரசாரப் பேரணி...

தொடா்ந்து, அண்ணா பூங்கா வளாகத்தில் இருந்து கோட்டை மைதானம் வரை பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். அவருடன், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் பங்கேற்றனா். வழிநெடுகிலும், திமுக தொண்டா்கள், பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு:

சாலையில் நடந்து சென்றவாறு உதயசூரியன் சின்னத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தாா். அப்போது, சாலையில் இருமருங்கிலும் திரண்டிருந்த தொண்டா்கள், பொதுமக்கள், முதல்வா் மு.க. ஸ்டாலின் மீது மலா்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.