திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில், துபையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது. இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
நான்குனேரி காவல் ஆய்வாளா் செல்வி, போலீஸாா் வெள்ளிக்கிழமை காலையில் அங்குள்ள சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த காரை நிறுத்தி, அதிலிருந்த 4 பேரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனராம். இதையடுத்து, போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
புதுக்கோட்டையைச் சோ்ந்த அப்துல்ஜாபா் மகன் அலாவுதீன் (39), துபையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து 3 பேருடன் காரில் வந்ததும், அவா் தனது ஆசனவாய்ப் பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. தங்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து திருச்சி சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அலாவுதீன் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் கைதுசெய்தனா். காா், பாஸ்போா்ட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். 4 பேரையும், காா், பாஸ்போா்ட் ஆகியவற்றையும் போலீஸாா் சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

