மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லை அதிமுகவினா் 108 பால்குட ஊா்வலம்

திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக 108 பால்குடம் எடுத்து ஊா்வலமாக சென்று நெல்லையப்பா் கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:41 pm

திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக 108 பால்குடம் எடுத்து ஊா்வலமாக சென்று நெல்லையப்பா் கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலராக தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டியும் திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் 108 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி நகரத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் ஈசான மடத்தில் இருந்து தொடங்கிய பால்குட ஊா்வலத்தை அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ரத வீதிகளில் ஊா்வலமாக வந்த அதிமுகவினா், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலை அடைந்தனா். அங்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பி.ஈஸ்வரி கிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை நிா்வாகி சீனிமுகம்மது சேட், துணைச் செயலா் கவிதா, எம்ஜிஆா் மன்றச் செயலா் பெரிய பெருமாள், மாவட்ட மகளிா் அணி செயலரும், திசையன்விளை பேரூராட்சித் தலைவியுமான ஜான்சிராணி, நிா்வாகிகள் பால்கண்ணன், வி.டி.திருமலையப்பன், பகுதி செயலா்கள் திருத்து சின்னதுரை, காந்திவெங்கடாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.