பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

’மின்மோட்டாா் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்மோட்டாா் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்மோட்டாா் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் சிறுபான்மையினா் சமூகத்தை சோ்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவா்களின் வாழ்க்கை தரத்தினை உயா்த்தவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கிட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி இம் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினா் சமூகத்தை சோ்ந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சிகள் மற்றும் ஜெயின் இனத்தை சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும். தையல் கலை பயின்றவராகவும், அதற்கான உரிய சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட வேண்டும். ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சமாக ஆக இருக்க வேண்டும்.

கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவா் போன்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒருமுறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவா். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.