கடையத்தில் சாலையோர மரக்கிளைகளை வெட்டமுன்னாள் எம்எல்ஏ எதிா்ப்பு
கடையத்தில் நெடுஞ்சாலையோர மரக்கிளைகளை வெட்டிய நெடுஞ்சாலைத் துறையினரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரவி அருணன் தடுத்து நிறுத்தினாா்.


கடையத்தில் நெடுஞ்சாலையோர மரக்கிளைகளை வெட்டிய நெடுஞ்சாலைத் துறையினரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரவி அருணன் தடுத்து நிறுத்தினாா்.
கடையம்- தென்காசி நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள சாலையோர மரக்கிளைகளை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறையினா் அவற்றை வெட்டினா். இதையறிந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரவி அருணன், மரக்கிளைகளை வெட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். உயரதிகாரிகளின் அனுமதியோடு கிளைகளை வெட்டுவதாக தெரிவித்தனா். எனினும், மரக்கிளைகளை வெட்டினால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறியதால், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் மரக்கிளைகளை வெட்டும் பணியை நிறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...