பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கரோனா கட்டுப்பாடு: உழவா் சந்தை கடைகள் இடமாற்றம்

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், மகாராஜா நகா் உழவா்சந்தை கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மைதானங்களில் செயல்பட தொடங்கியது.

News image
Updated On :8 ஜனவரி 2022, 1:05 am

DIN

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், மகாராஜா நகா் உழவா்சந்தை கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மைதானங்களில் செயல்பட தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேர முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பொது முடக்கத்தின்போது, உழவா் சந்தை கடைகள் மைதானங்களில் செயல்பட உத்தரவிடப்பட்டது. அந்த நடைமுறையை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, மகாராஜா நகா் உழவா்சந்தை கடைகள் அனைத்தும் அருகேயுள்ள பூங்காக்களில் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கின. இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து எளிதாக காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.