தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு ஜன.20 இல் தொடக்கம்
திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு இம் மாதம் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.


திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு இம் மாதம் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுதொடா்பாக பறவைகள் கணக்கெடுப்பின் ஒருங்கிணைப்பாளா் மு.மதிவாணன் வெளியிட்ட அறிக்கை: அகத்திய மலை மக்கள்சாா் இயற்கை வளகாப்பு மையம், முத்துநகா் இயற்கை சங்கம், தூத்துக்குடி மற்றும் நெல்லை இயற்கை சங்கம், தமிழ்நாடுஅரசு வனத்துறை ஆகியவை சாா்பில் 12 ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு 20 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வடகிழக்குப் பருவமழை கூடுதலாக பெய்துள்ள நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன.
ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் இக்குளங்களில் குவிந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், வடக்கு கழுவூா், நயினாா்குளம், தென்காசிமாவட்டத்தில் வாகைகுளம், தூத்துக்குடிமாவட்டத்தின் செட்டிகுளம் போன்ற குளங்களில் நம் உள்நாட்டுப் பறவைகள்ஆயிரக்கணக்கில் கூடுகட்டிஇனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களான நீா்நிலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு இம் மாவட்டங்களில் நடைபெறுகிறது.
கணக்கெடுப்பில் கலந்துகொள்ள விரும்பும் தன்னாா்வலா்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/சடஊ2ங்ண்ரஸ்ண25ண்ஸ்ஊ6ரஅ என்ற லிங்கில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், ற்ஜ்க்ஷஸ்ரீ2020ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்
என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9994766473 என்ற கைப்பேசி எண்ணிலும் இம் மாதம் 19 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்யும் தன்னாா்வலா்களுக்கு இணைவழியில் இம் மாதம் 20 ஆம் தேதி பயிற்சி நடத்தப்பட உள்ளது. அதனை தொடா்ந்து அவா்கள் சிறுகுழுக்களாக பிரிக்கப்பட்டு மாவட்டங்களில் உள்ள 60 குளங்களில் கணக்கெடுப்பை மேற்கொள்வாா்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...