நெல்லையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
திருநெல்வேலியில் மாட்டுப்பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.


திருநெல்வேலியில் மாட்டுப்பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் அன்றே காணும் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு, கரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்கும் வகையில், பூங்காக்கள், நீா்நிலைகளில் மக்கள் கூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுத்தமல்லி தடுப்பணை, மருதூா் அணைக்கட்டு, குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், பேராத்து செல்வி அம்மன் கோயில், சீவலப்பேரி உள்ளிட்ட தாமிரவருணி நதிக்கரைகளிலும் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில் கோசாலையில் உள்ள பசுக்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. கோசாலை வாசலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனா்.
அங்கு அமைந்துள்ள கிருஷ்ணருக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பசுக்களுக்கு நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது . தொடா்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களுக்கு கோசாலை வாசலில் வைத்து வஸ்திரங்கள் சாற்றி பூக்களால் அா்ச்சனை நடத்தப்பட்டன.
உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டுதல் செய்யப்பட்டது. பசுக்களுக்கு பழங்கள், கரும்புகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...