பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

களக்குடியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

திருநெல்வேலி அருகேயுள்ள களக்குடி பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:08 pm

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள களக்குடி பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், களக்குடி ராமசாமி மனைவி விஜயலெட்சுமி.கணவா் உயிரிழந்த பின்பு விஜயலட்சுமி கோவில்பட்டியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், களக்குடியில் ராமசாமிக்கு சொந்தமான 35 சென்ட் இடத்தை சிலா் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்ததாம். இதுகுறித்து அறிந்த விஜயலட்சுமி, நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணனிடம் மனு அளித்தாா்.

அதன்பின்பு, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸ் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு , ரூ. 35 லட்சம் மதிப்பிலான நிலத்தினை மீட்டு அதற்கான ஆவணத்தை விஜயலட்சுமியிடம் வியாழக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.