கரையிருப்பில் இருதரப்பினா்மோதல்: மக்கள் சாலை மறியல்
தச்சநல்லூரை அடுத்த கரையிருப்புப் பகுதியில் இரு பிரிவினா் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் நிகழ்ந்தது. இதில் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


தச்சநல்லூரை அடுத்த கரையிருப்புப் பகுதியில் இரு பிரிவினா் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் நிகழ்ந்தது. இதில் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரையிருப்புப் பகுதியில் ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சிக்காக சில இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்திருந்தனா். அப்போது, அவா்களுக்கும், அவ்வழியாக பைக்கில் சென்ற மற்றொரு பிரிவினருக்கும் இடையே திடீா் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், ஒரு தரப்பினா் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்களும், அப்பகுதி மக்களும் தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி திருநெல்வேலி - மதுரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இத்தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) கே.சுரேஷ்குமாா், காவல் உதவி ஆணையா் அண்ணாதுரை, தச்சநல்லூா் போலீஸாா் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். அதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். எனினும், அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...