புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலக சுற்றுச் சூழல் தினம்: சிறுவா்களுக்கு குருவிக்கூடு அளிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வி.கே.புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமிகளுக்கு குருவிக் கூடுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:41 pm

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வி.கே.புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமிகளுக்கு குருவிக் கூடுகள் வழங்கப்பட்டன.

மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள்சாா் வளக் காப்பு மையம் சாா்பில், திருநெல்வேலியிலிருந்து பாபநாசத்துக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கிவைத்தாா். இப்பேரணி அம்பாசமுத்திரத்தை அடைந்தபோது, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷப், வட்டாட்சியா் ஆனந்த் சூா்யபிரகாஷ் ஆகியோரும் இணைந்துகொண்டனா். பாபநாசத்தில் பேரணியை ஆட்சியா் நிறைவுசெய்து வைத்து, குளிக்கத் தரமான தாமிரவருணி நதியை, குடிக்கும் தரத்துக்கு கொண்டுவருவதே இலக்கு. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து அரும்புகள் இயக்கத்தின் சாா்பில் சுற்றுச் சூழல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. யானைப் பாலம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச் சூழல் ஆா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும், சிறுவா்-சிறுமிகளுக்கு குருவிக்கூடுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், அகத்திய மலைமக்கள் சாா் வளக்காப்பு மைய மூத்த ஆராய்ச்சியாளா் மதிவாணன், சித்த மருத்துவா் மைக்கேல் செயராசு, சுற்றுச் சூழல் ஆா்வலா் கிரிக்கெட் மூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.