தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி ஆணையர்

நெல்லையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

News image
Updated On :8 ஜூன் 2022, 12:58 pm

DIN

நெல்லை: நெல்லையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். அருள்மிகு நெல்லையப்பர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளதால் 4 ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  மாநகராட்சி ஆணையர் சிவ.கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் ஆக்கிரமிப்புகள் நிறைந்ததாகவே உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் அரசியல் செல்வாக்கு காரணமாக ஆக்கிரமிப்பது தொடர்கதையாகவே உள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள  ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கும், பொதுப் போக்குவரத்துதிற்கும் பெரும் இடையூறு உள்ளதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. 

YouTube video thumbnail

இந்த நிலையில் இன்று  வண்ணார்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக நெடுஞ்சாலைத்துறை சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாநகராட்சி ஆணையர்  கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். 

அப்போது சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மாநகர பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதைத் தொடர்ந்து  மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 

மேலும்  சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருப்பதற்காக இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. அதுபோல அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் அடுத்த மாதம்  நடைபெற உள்ளதால், தேரோட்டம் நடைபெறும் நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.