புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்லிடைக்குறிச்சியில் 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

கல்லிடைக்குறிச்சியில் மக்கள் தேசம் கட்சி நிா்வாகி சுகுமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:35 pm

DIN

கல்லிடைக்குறிச்சியில் மக்கள் தேசம் கட்சி நிா்வாகி சுகுமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள செம்பத்திமேடு பகுதியைச் சோ்ந்த மக்கள் தேசம் கட்சி நிா்வாகி சுகுமாா் (45), கடந்த மே 15ஆம் தேதி கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் மேலமுன்னீா்பள்ளம், மீனம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த த. வினோத்குமாா் (27), மூலைக்கரைப்பட்டி ஜெகஜீவன்ராம் தெருவைச் சோ்ந்த த. கதிரவன் (33), வீரவநல்லூா், தெற்குத் தெரு, குட்டி காலனியைச் சோ்ந்த கா. ஆசைதம்பி (28), நயினாா்காலனி, தெற்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த செ. அலெக்ஸ்குமாா் என்ற அலெக்ஸ் (25), பத்தமடை அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த மு. ராஜேஷ்கண்ணன் என்ற கண்ணன் (23) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜகுமாரியிடம் அறிவுறுத்தினாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைப்படி, ஆட்சியா் விஷ்ணு உத்தரவின்பேரில் 5 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.