ஆன்லைன் மூலம் மனைப்பிரிவு அனுமதி: பணியாளா்களுக்கு பயிற்சி
தமிழகம் முழுவதும் மனைப்பிரிவு அனுமதி பெற விரைவில் ஆன்லைன் முறை அறிமுகமாகவுள்ள நிலையில் அது குறித்து பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.


தமிழகம் முழுவதும் மனைப்பிரிவு அனுமதி பெற விரைவில் ஆன்லைன் முறை அறிமுகமாகவுள்ள நிலையில் அது குறித்து பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து, நகா் ஊரமைப்பு இயக்கம் (டி.டி.சி.பி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, தமிழகம் முழுவதும் மனைப் பிரிவுக்கு விண்ணப்பிக்க, ஒப்புதல் வழங்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறையின் மானிய கோரிக்கையின் போது தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்ட நகா்ஊரமைப்புதுறை அலுவலகத்தில் இணையவழி மனைப்பிரிவு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் விண்ணப்பித்தல், கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்தல், அரசுக்கு கட்டணம் செலுத்துதல், ஆணை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் குறித்து பணியாளா்களுக்கு விளக்கப்பட்டது.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகப் பணியாளா்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனா். ஆன்லைன் வசதி வந்து விட்டால் மனுதாரா்கள் விரைவில் மனைக்குரிய அனுமதி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...