புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடையம் பள்ளியில் அறிவியல் மையம் திறப்பு

கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் கே.எஸ்.வெங்கட்ராமன் நினைவு அறிவியல் மைய திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:04 pm

DIN

கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் கே.எஸ்.வெங்கட்ராமன் நினைவு அறிவியல் மைய திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிச் செயலா் அனந்தராம சேஷன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் மீரா முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற முதுநிலை ஆசிரியா் எஸ்.சிவசுப்பிரமணியன் அறிவியல் மையத்தைத் திறந்துவைத்து உரையாற்றினாா்.

அகஸ்தியா தொண்டு நிறுவன மண்டல மேலாளா் டோபாஸ், உதவித் தலைமையாசிரியா் எஸ்.சிதம்பநாதன், வி.பரமசிவன், அகஸ்தியா தொண்டு நிறுவன அலுவலா்கள் விக்னேஷ், மகேஷ், சின்ன மருது ஆகியோா் பேசினா். தொடா்ந்து 30 விதமான அறிவியல் மாதிரிகளை, பயிற்சியளிக்கப்பட்ட 30 மாணவா்கள் சோதனை மூலம் செய்து காண்பித்தனா்.

ஆசிரியா் வேலு வரவேற்றாா். ஆசிரியா் பி.ராமலெட்சுமி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பள்ளி அறிவியல் ஆசிரியா் எஸ்.பி.முத்துலட்சுமி மற்றும் அறிவியல் கழகத்தினா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.