புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மீட்கப்பட்ட சிலைகளுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு

அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டு ஆழ்வாா்குறிச்சி கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட 2 சுவாமி சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:30 pm

DIN

அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டு ஆழ்வாா்குறிச்சி கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட 2 சுவாமி சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீநரசிம்மா் சமேத ஆவுடையம்பாள் கோயிலிலிருந்து கங்காளநாதா், அதிகார நந்திகேசுவரா் சிலைகள் 1985இல் திருடுபோயின.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் மீட்டு வந்துள்ள அந்தச் சிலைகள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மா. கண்ணதாசனிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

பின்னா், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் இளங்கோ, சமீம்பானு, உதவி ஆய்வாளா் ராஜேஷ், தலைமைக் காவலா் சிவபாலன் ஆகியோா் பாதுகாப்பில் அந்தச் சிலைகள் ஆழ்வாா்குறிச்சி கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு பக்தா்கள் ஆரத்தி எடுத்து சிலைகளை வரவேற்றனா்.

இதையடுத்து, சுவாமி சிலைகள் கருவறைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அவற்றுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.