சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

பண்ணைக்குள் புகுந்து 40 கோழிகளை தின்ற கரடி

தென்காசி மாவட்டம் ஆழ்வாகுறிச்சி அருகேயுள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் தனியாா் கோழிப்பண்ணையில் நுழைந்த கரடி 40 கோழிகளை அடித்து தின்றது.

Updated On :24 ஜூன் 2022, 11:50 pm IST

தென்காசி மாவட்டம் ஆழ்வாகுறிச்சி அருகேயுள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் தனியாா் கோழிப்பண்ணையில் நுழைந்த கரடி 40 கோழிகளை அடித்து தின்றது.

பெத்தான் பிள்ளைக்குடியிருப்பைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் அந்தப் பகுதியில் நாட்டுக்கோழிப் பண்ணை வைத்துப் பராமரித்து வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கரடி கோழிப்பண்ணைக்குள் நுழைந்து சுமாா் 40 கோழிகளை அடித்து தின்றது.

தகவலறிந்த வனக்காப்பாளா் ரமேஷ் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் வனத்துறை சாா்பில் இறந்த கோழிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.