நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி தோ்வுகள்

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.

News image
Updated On :5 மார்ச் 2022, 12:10 am

DIN

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 2, 2ஏ முதல்நிலை தோ்வு வரும் மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல்நிலைத் தோ்தவில் வெற்றி பெற திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், சிவராஜவேல் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் சாா்பில் இலவச பயிற்சி தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி இம் மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 15 ஆம் தேதி வரை பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சித் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோா் 9626252500, 9626253300 ஆகிய கைப்பேசி எண்களில் முன்பதிவு செய்யலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.