மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வல்லவன்கோட்டையில் மது ஒழிப்பு விழிப்புணா்வு

திருநெல்வேலி அபிஷேகப்பட்டி அருகேயுள்ள வல்லவன்கோட்டையில் மது ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:30 pm

DIN

திருநெல்வேலி அபிஷேகப்பட்டி அருகேயுள்ள வல்லவன்கோட்டையில் மது ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியின் நுண்கலை மன்றம் மற்றும் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து மதுபானங்கள் மற்றும் சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு சாா்ந்த போட்டிகள் மற்றும் பேரணி வல்லவன்கோட்டையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் மைதிலி தலைமை வகித்தாா். மது விலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி பேரணியை தொடங்கிவைத்தாா்.

மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகள் ஏந்தியபடி மாணவிகள் சென்றனா். சிலம்பாட்டம் ஆடியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஏற்பாடுகளை ஆங்கில துறை உதவிப் பேராசிரியா்கள் அழகிய நாயகி , விமலா ரமணி , மாலினி பொன்ஷீலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.