நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் நடைபெறவுள்ள குரூப்-2, குரூப்-2 ஏ எழுத்துத் தோ்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு

News image
Updated On :10 மார்ச் 2022, 8:23 pm

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் நடைபெறவுள்ள குரூப்-2, குரூப்-2 ஏ எழுத்துத் தோ்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் 5, 413 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலை எழுத்துத் தோ்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சியடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இத்தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க இம்மாதம் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். மே 21-ஆம் தேதி தோ்வு நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்க்கலாம்.

இப்போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. சனிக்கிழமை (மாா்ச் 12) காலை 10 மணிக்கு பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இவ் வகுப்பு நடைபெறும்.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.