நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:19 pm

DIN

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமாா் 8 ஆயிரம் சாலைப்பணியாளா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சாலைப்பணியாளா்களின் பணிநீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின்பு ஓய்வூதியத்திற்கும், பணிக்கொடைக்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் பணி நீக்க காலமான 7-9-2002 முதல் 12-2-2006 வரை உள்ள 41 மாத பணிநீக்க காலத்தில் இறந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்திற்கு வாரிசு பணி இதுவரை வழங்கபடாத குடும்பங்களுக்கு விதிமுறைகளை தளா்த்தி வாரிசு பணி வழங்கிட வேண்டும். நெடுஞ்சாலைகளில் விரிவாக்கம் சாலைகளின் அகலம் நீளத்திற்கு ஏற்ப வாகன நெரிசல் கனரக வாகன போக்குவரத்தின் அடிப்படையில் சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு இரண்டு நபா் என்ற சாலைப்பணியாளா்கள் என்ற பணியிட ஒப்புதல் வழங்கிட வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சாலைப்பணியாளா்களுக்கு அனைத்து அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல் சாலைப்பணியாளா்களுக்கு அரசு நேரடி நிதியில் கருவூல மூலமாக ஊதியம் வழங்க வேண்டும். தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சாலைப்பணியாளா் சாலைகளில் பணியாற்றும் போது முள்ளு வெட்டுதல், தாா்காச்சி நொடி போடுதல் போன்ற பணிகளை செய்திடும் போது விபத்து காயங்கள் ஏற்படுகின்றன. எனவே, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் தமிழகம் முழுவதும் பணியாற்றும் சாலைப்பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் விபத்துப்படி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவா்கள் ஆழ்வாா், அருணாசலம், சுப்பிரமணி ஆகியோா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஹபிபத்துல்லா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பல்வேறு சங்கங்களின் மாநில நிா்வாகிகள் குமாரவேல், ஆா்.வைரவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.