நெல்லையில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.


திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. இத்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்று, இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள் தனியாா் வேலைவாய்ப்பு இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும், பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...