கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் கோரி நெல்லை ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். விவசாயிகளிடம் எவ்வித பணமும் வசூலிக்காமல் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். சுடலைராஜ் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலா் ஸ்ரீராம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
பின்னா் ராதாபுரம் வட்டார விவசாயிகள் சங்கத்தை சோ்ந்தவா்கள் இணைந்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.கற்பகம்,
எஸ்.பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...