ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

செல்போனை திருடி கொரியரில் அனுப்பிய திருடன்!! நடுவில் நடந்த டிவிஸ்ட்

செல்போனை திருடி கொரியரில் அனுப்பிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் புகார்.

News image

செல்போன் திருட்டு - சித்தரிக்கப்பட்டது

Updated On :26 மார்ச் 2026, 2:53 pm IST

சென்னை: சென்னையில், செல்போனை திருடிவிட்டு, அதன் மூலம் பண மோசடிகளை செய்த திருடன், கொரியரில் செல்போனை திருப்பி அனுப்பிய விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வேல்முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போனை, அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றிருக்கிறார்.

வேல்முருகனும், தொடர்ந்து தன்னுடைய செல்போனுக்கு அழைத்தும், யாரும் செல்போனை எடுக்கவில்லை. ஒருமுறை, அவரது மனைவி, அந்த செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது, மறுமுறையில், போனை எடுத்த இளைஞர், இந்த போனை திருப்பிக் கொடுக்க வீட்டு முகவரியை அனுப்புமாறு கேட்டிருக்கிறார். அவரும் உடனடியாக வீட்டு முகவரியைக் கொடுத்ததும், திருடனோ, செல்போனைத் திருப்பிக் கொடுக்க ரூ.1,500 பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அவரும் பணம் அனுப்பியிருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட திருடன், செல்போனை கொரியர் மூலம் அனுப்பியிருக்கிறார்.

வேல்முருகன் கொரியரில் வந்த செல்போனை ஆன் செய்து பார்த்தபோது, அது முழுக்க முழுக்க ஃபார்மட் செய்யப்பட்டு, ஒரு புது செயலி பதிவேற்றம் செய்து அதன் மூலம், செல்போனில் இருந்த போன் பேவிலிருந்து ரூ.5,000 எடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வதுள்ளது.

அது மட்டுமல்லாமல், வேல்முருகனின் செல்போனில் பதிவான தொடர்பு எண்களுக்கு மெசேஜ் மூலம் பணம் கேட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Summary

Victim files complaint in case of stolen cell phone sent by courier.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.