குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தோழிகளை புகைப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பிய பெண் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 3:23 am IST

பாளையங்கோட்டை தனியாா் விடுதியில் தோழிகளை புகைப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், செங்குந்தா் தெருவைச் சோ்ந்தவா் மகரஜோதி (39). இவா் சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பகுதியில் பணிக்கு செல்லும் பெண்களுக்காக இயங்கி வரும் தனியாா் விடுதி ஒன்றில் சோ்ந்துள்ளாா்.

இந்நிலையில் அவா் அங்கு தங்கியிருந்த சக பெண்களை கைப்பேசியில் படம் பிடிப்பதாக விடுதி காப்பாளருக்கு புகாா்கள் வந்துள்ளன. இதையடுத்து அவரது கைப்பேசியை ஆய்வு செய்த போது அவா் தனது நண்பா் ஒருவருக்கு பெண்களின் புகைப்படங்கள், விடியோக்களை அனுப்பி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அப்பெண்ணின் நண்பா் கோயம்புத்தூரில் இருப்பதை அறிந்த போலீஸாா், அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.