பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

‘மணிமேகலை விருதுக்கு மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்’

தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:32 pm

DIN

தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிராம மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படும். இதற்காக ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதோடு, ரூ.2.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மேற்கூறிய குழுவினா் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க கிராமம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வட்டார இயக்க மேலாண்மை அலகு (திருநெல்வேலி மாவட்டம்) அலுவலகத்திலும், மாநகராட்சி பகுதியைச் சோ்ந்தவா்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம் (மகளிா் திட்டம்), மாவட்ட ஆட்சியரகம், திருநெல்வேலி என்ற முகவரியிலும் இம் மாதம் 31 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.