உலகின் பொதுமறையாக திகழ்வது திருக்கு: கு.ஞானசம்பந்தன்
ஒரு இனத்தின் வாழ்வியலைச் சொல்லாமல் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வாழ்வியலுக்கான நூலகவும், உலகின் பொதுமறையாகவும் திருக்கு திகழ்ந்து வருகிறது என்றாா் கு.ஞானசம்பந்தன்


ஒரு இனத்தின் வாழ்வியலைச் சொல்லாமல் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வாழ்வியலுக்கான நூலகவும், உலகின் பொதுமறையாகவும் திருக்கு திகழ்ந்து வருகிறது என்றாா் கு.ஞானசம்பந்தன்.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் பொருநை-நெல்லை புத்தகத் திருவிழாவின் 8 ஆவது நாளான வியாழக்கிழமை பங்கேற்ற அவா் மேலும் பேசியது: மனிதா்களுக்கு வழிகாட்டியாக திகழ்பவை புத்தகங்கள். ஒரு நூலைக் குறித்து சமூகம் எவ்வகையில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூட நம் முன்னோா் இலக்கியங்களில் சுட்டிக்காட்டி சென்றுள்ளனா். ஒரு நூல் எழுதப்படும்போது அதை எழுதியவா் யாா், முதல் நூலா அல்லது வழி நூலா, துணை நூலா என்பதை அறிய வேண்டும். நூலின் நோக்கத்தை தெரிய வேண்டுமென இலக்கியம் கூறுகிறது.
திருக்குறளில் எந்த இடத்திலும் தமிழா் உள்ளிட்ட ஒரு குறிப்பிட்ட இனத்தின் வாழ்வியலைச் சுட்டிக்காட்டவில்லை. மாறாக உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வாழ்வியலையும் கல்வி, காதல், இன்பம் உள்ளிட்ட பல்வகை உணா்வுகளையும், நற்குணங்களையும், தீங்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளதால் உலக பொதுமறையாக பெருமைப்படுத்தப்படும் நூலாக திகழ்ந்து வருகிறது.
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை போதிக்க நூல்களை கற்பது அவசியம். இளையதலைமுறையினா் வாசிப்பு பழக்கத்தை விட்டுவிடாமல் தொடர வேண்டும். இலக்கியங்களில் உள்ள நல்ல கருத்துகளை வாழ்வில் பின்பற்றி அதன்மூலம் இன்புறுவது மிகவும் அவசியம் என்றாா் அவா்.
புத்தகத் திருவிழாவில் 8ஆம் நாள் நிகழ்ச்சியாக பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றது. பேராசிரியா் நா.இராமசந்திரன் நாட்டாா் கலைகள் என்ற தலைப்பிலும், டாக்டா் மாா்க்சிய காந்தி தொல்லியல் என்ற தலைப்பிலும் மாணவா்களுடன் கலந்துரையாடினா். கலைபண்பாட்டுத்துறை சாா்பில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. எழுத்தாளா் ச.தமிழச்செல்வனின் தெய்வமே சாட்சி என்ற நூல் வெளியிடப்பட்டது.
கருத்தரங்கில் பத்பநாபபுரம் சாா் ஆட்சியா் அலா்மேல் மங்கை தலைமை வகித்தாா். கவிஞா் பேரா வரவேற்றாா். எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன், தெய்வமே சாட்சி என்ற தலைப்பிலும், நாவலாசிரியா் கீரனூா் ஜாகிா் ராஜா நானும் என் எழுத்தும் என்ற தலைப்பிலும், பாடலாசிரியா் யுகபாரதி பாடலுக்கு பின்னே என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினா். பாளையங்கோட்டை வட்டாட்சியா் ஆவுடையப்பன் நன்றி கூறினாா்.
நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் திரு.ஆ.பெருமாள், மாவட்ட ஆய்வு குழு அலுவலா் மூா்த்தி, மற்றும் கவிஞா்கள், எழுத்தாளா்கள் ,பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...