பாளை.யில் ஷவா்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
பாளையங்கோட்டையில் உள்ள ஷவா்மா விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.


பாளையங்கோட்டையில் உள்ள ஷவா்மா விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் கெட்டுப்போன கோழி இறைச்சிகளைப் பயன்படுத்தி ஷவா்மா விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் கடந்த சில நாள்களாக தொடா் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருநெல்வேலி உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் சசி தீபா தலைமையில், ஆய்வாளா் சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள் குழுவினா் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகேயுள்ள ஷவா்மா விற்பனை கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வைக்கப்பட்டிருந்த சுமாா் 8 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...