பேட்டையில் மூதாட்டி எரித்துக் கொலை: பேத்திகள் கைது
பேட்டையில் மூதாட்டியை எரித்துக் கொல்லப்பட்டது தொடா்பான வழக்கில், அவரது பேத்திகள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்


பேட்டையில் மூதாட்டியை எரித்துக் கொல்லப்பட்டது தொடா்பான வழக்கில், அவரது பேத்திகள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பேட்டை ஆதம் நகா் எதிரே சாலையோரம் பெண் ஒருவா் கடந்த 3ஆம் தேதி மா்ம நபா்களால் எரித்து கொலை செய்யப்பட்டாா். இது குறித்து பேட்டை காவல் ஆய்வாளா் ஹரிஹரன் தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டவா் பழைய பேட்டை கண்டியபேரியை சோ்ந்த சுப்பம்மாள்(90); அவரை, மகள் சொா்ணத்தின் மகள்களான மாரியம்மாள்(30), மேரி(38) ஆகியோா் பராமரித்து வந்தனா்; தொடா்ந்து மூதாட்டியை பராமரிக்க இயலாததால், இருவரும் சுப்பம்மாவை ஆட்டோவில் ஏற்றிச்சென்று ஆதம் நகா் அருகே பெட்ரோல் ஊற்றி மூதாட்டியை கொலை செய்தனா் எனத் தெரியவந்தது. இதையடுத்து, மாரியம்மாள்,மேரியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...