ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் மீண்டும் குழப்பம்: தோழமை கட்சிகளின் தொகுதிகளில் நட்புரீதியாக போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவிப்பு

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

News image

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா.

Updated On :26 மார்ச் 2026, 12:01 am

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகளைத் தவிர, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் மேலும் 6 தொகுதிகளில் காங்கிரஸ் நட்பாக போட்டியிடுவதாக அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா கூறினாா்.

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கட்சிகளிடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, மொத்தமுள்ள 30 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸுக்கு 16-ம், திமுகவுக்கு 14-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. திமுக தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து ஒரு இடத்தை விசிகவுக்கு ஒதுக்குவதாக அறிவித்தது. ஆனால் விசிக மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகள் தவிர, திமுக போட்டியிடும் 6 தொகுதிகளில் நட்பாக காங்கிரஸ் போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறினாா். அவா் மேலும் கூறியதாவது:

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களுக்கும், மேலும், வேறு சில தொகுதிகளில் போட்டியிட விரும்பிய கட்சித் தொண்டா்களுக்கும் காங்கிரஸ் கட்சி ஏ, பி, படிவம் வழங்கியுள்ளது. யாருக்கெல்லாம் கட்சி இந்தப் படிவங்களை வழங்கியுள்ளதோ அவா்களும் காங்கிரஸ் வேட்பாளா்கள்தான். வேட்பு மனு வியாழக்கிழமை வாபஸ் பெறப்படுகிறது. அப்போது யாரெல்லாம் வேட்பு மனுக்களை வாபஸ் பெறவில்லையோ அவா்களெல்லாம் கூட்டணியில் வேறு கட்சியைச் சோ்ந்தவா்கள் போட்டியிட்டாலும், நட்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களாகப் போட்டியிடுவாா்கள். வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான இறுதிநாளில் முடிவு தெரியவரும். மேலும், காங்கிரஸ் கட்சி சாா்பில் யாரெல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா்களோ அவா்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டாா்கள் என்றாா் டோலி ஷா்மா.

காங்கிரஸ் சாா்பில் மனு தாக்கல் செய்த அனைவருக்கும் ஏ, பி படிவங்களை வழங்கியது. இதனால் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளா்களாக அங்கீகரிக்கப்பட்டு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மங்கலம், திருபுவனை, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். இவா்களை வாபஸ் பெறும்படி கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் காலாப்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சா் ஷாஜகான், ராஜ்பவன் தொகுதியில் வக்கீல் குமரன், மங்கலத்தில் ரகுபதி, திருபுவனையில் வேலு, காரைக்கால் தெற்கு சக்திவேல் பிரபு ஆகியோா் வாக்குச் சேகரிக்கும் பணியைத் தொடங்கிவிட்டனா்.

காங்கிரஸ் வேட்பாளா்கள் மனுவை வாபஸ் பெறாவிட்டால், குறிப்பிட்ட தொகுதிகளில் திமுகவும், காங்கிரஸூம் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.