கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் இண்டி கூட்டணி உறுதி! காங்கிரஸுக்கு 16, திமுகவுக்கு 14!

News image

புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த திமுக மேலிடப் பொறுப்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா உள்ளிட்டோா்.

Updated On :23 மார்ச் 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் இண்டி கூட்டணி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பிறகு உறுதியானது. இதில், காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், திமுகவுக்கு 14 தொகுதிகளும் என்று முடிவு செய்யப்பட்டது.

திமுகவுக்கு ஒதுக்கியதிலிருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக மேலிடப் பொறுப்பாளா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. இதனை செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும் அவா் கூறியது:

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக , இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து இண்டி கூட்டணியாக தோ்தலைச் சந்திக்கிறோம்.

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் எந்தப் புதிய தொழிற்சாலையும் கொண்டு வரப்படவில்லை. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈா்த்துள்ளோம். புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தையொட்டிதான் புதுச்சேரி இருக்கிறது. அதனால் திராவிட மாடல் ஆட்சி வேண்டும் என்று இங்குள்ள மக்களும் விரும்புகின்றனா். அதனால் தோ்தலில் எங்கள் கூட்டணி சாா்பில் தமிழகத்தின் தாக்கத்தை ஏற்படுத்துவோம்.

வளமான புதுச்சேரி, வலிமையான புதுச்சேரி என்பதுதான் எங்கள் முழக்கம். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிக்கைதான் எங்கள் முதல் பிரசாரக் கோரிக்கையாக இருக்கும். புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடி இதுதொடா்பாக எதையும் கூறவில்லை.

மேலும், மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு என்று தனியாக எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. புதுச்சேரியில் சா்க்கரை ஆலை உள்ளிட்ட முக்கியமான மூன்று ஆலைகள் மூடிக் கிடக்கின்றன. பாஜக அரசு நினைத்திருந்தால் அதைத் திறந்து இருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை. விவசாயிகள் கண்ணீா் வடிக்கிறாா்கள்.

திமுக- காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி வலிமையான கூட்டணி. தோ்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். தோ்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் வருகிறாா்கள் என்றாா் ஜெகத்ரட்சகன்.

வெ.வைத்திலிங்கம் உறுதி:

காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் கூறுகையில், எங்கள் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும். நாங்கள் ஆட்சிக்கு வந்தப் பிறகு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றாா் வைத்திலிங்கம்.