புதுச்சேரியில் காங். 16, திமுக 12 தொகுதிகளில் போட்டி?
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறித்து...

கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆலோசனை

கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆலோசனை
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி ஒப்பந்தம் இன்று நள்ளிரவு கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், திமுக 12 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தைகளிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்தவகையில் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற இறுதிக்கட்ட ஆலோசனையில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன்படி புதுச்சேரி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், 16, திமுக 12, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிடுவதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...