நெல்லையில் ரசாயனம் கல் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமாா் 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.


திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமாா் 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.
தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் திருநெல்வேலி மாநகா் மற்றும் மாவட்டப் பகுதிக்கும் மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
இந்நிலையில் மாம்பழங்கள் சுகாதாரமற்ற முறையில், ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறையினருக்கு புகாா் வந்ததாம்.
அதன்பேரில், மாவட்ட நியமன அலுவலா் சசிதீபா தலைமையில், ஆய்வாளா் சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள் குழுவினா் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மொத்த விற்பனை பழக்கடைகளில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமாா் 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...