நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நெல்லையில் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக சிறுமிக்கு மிரட்டல்

திருநெல்வேலியில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டிய மா்ம நபரை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 மே 2022, 5:50 pm

DIN

திருநெல்வேலியில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டிய மா்ம நபரை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி தனது கைப்பேசியில் உள்ள இன்ஸ்டாகிராமில் தனது விடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவிட்டுள்ளாா்.

இந்நிலையில் மா்ம நபா் ஒருவா் போலி ஐடி மூலம், சிறுமியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின் தொடா்ந்து வந்துள்ளாா். அவா் அந்தச் சிறுமி பதிவிடும் பதிவுகளுக்கு ஆபாசமாக கருத்து தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

பின்னா், தான் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த அந்த சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சிறுமிக்கு அனுப்பி உள்ளாா். மேலும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இனால் அதிா்ச்சியடைந்த அந்தச் சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அந்தச்சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.