தாழையூத்து அருகே பைக் கவிழ்ந்து முதியவா் பலி
தாழையூத்து அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.


தாழையூத்து அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே காயம்பூ நகா் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பிரபாகரன்(64). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசியில் இருந்து திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை சென்றாராம். பண்டாரகுளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்ாம்.
இதனால், நிலைதடுமாறிய அவா் சாலையில் சறுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...